ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-13 21:23 GMT
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி செல்வி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 250 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாாிகள் பறிமுதல் செய்து கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்