தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

Update: 2021-03-13 21:00 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி முன்னிலை வகித்தார். 

இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் கலந்துகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். இதில் அனைத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்