வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் பார்வையாளர்கள்

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை பார்வையாளர்கள் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

Update: 2021-03-13 20:54 GMT
சிவகங்கை,

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை பார்வையாளர்கள் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

2 பார்வையாளர்கள் நியமனம்

சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 2 தோ்தல் செலவினப்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது சிவகங்கைக்கு வந்துவிட்டனர். இவர்களில் காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக அமித்குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த 2 தொகுதி தொடர்பான செலவின விவரங்களை இவரிடம் தெரிவிக்கலாம். இவரது கைப்பேசி எண் 83004 30996 ஆகும்.

கண்காணிப்பு

 இதே போல் சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு வனஸ்ரீஹுல்லண்ணன்னவர் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கைப்பேசி எண் 83004 36191 ஆகும். மேற்கண்ட செலவின பார்வையாளர்களிடம் தேர்தல் தொடர்பான செலவினம் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு்ள்ள 2 பேரும் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விளம்பரங்களை கண்காணிக்கும் பணியில் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்