புகார் அளிக்க புதிய செயலி

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செலவினப்பார்வையாளர் நரசிங்குமார் கால்கோ கூறினார்.

Update: 2021-03-13 20:42 GMT
காரியாபட்டி, 
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அமைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல் செலவினப்பார்வையாளர் நரசிங்குமார் கால்கோ கூறினார். 
ஆலோசனை கூட்டம் 
திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவினப்பார்வையாளர் நரசிங்குமார் கால்கோ தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை வங்கியில் தனி கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் செலவினங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
புகார் 
 தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சேலை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினாலோ அல்லது மோதல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ செல்போனில் ப்ளே ஸ்டோரில் சிவிஜில் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெறும் முறைகேடுகளை இந்த ஆப் மூலம் தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம்.
நடவடிக்கை 
 ேதர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தேர்தல் செலவினப்பார்வையாளர் நரசிங்குமார் கால்கோ கூறினார்.  இதில் திருச்சுழி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன், உதவி தேர்தல் அலுவலர்கள் சிவக்குமார், சந்திரசேகரன் மற்றும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு  சகாய ஜோஸ், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்