தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த செயல் விளக்க முகாம் நடைபெற்றது. இதில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.