உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.81 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.81 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-13 20:10 GMT
பெரம்பலூர்:

வாகன சோதனை
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கோனேரிபாளையம் நான்கு ரோடு சந்திப்பில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திருச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.81 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
நெல் அறுவடை எந்திரம் வாங்க...
விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா நத்தம்பாடிபட்டி குறுக்கு தெருவை சேர்ந்த இருதயம் (வயது 58) என்பது தெரியவந்தது. அவர் நெல் அறுவடை எந்திரம் வாங்க பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்