மேலூர்,மார்ச்
மேலூரைச் சேர்ந்த குபேரன் என்பவர் யூனியன் அலுவலகம் காரில் சென்றார். அந்த காரில் திடீரென்று புகை எழும்பியது. உடனே காரை நிறுத்தி அதில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். பின்னர் நடுரோட்டில் நின்ற அந்த கார் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த மேலூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் ரோட்டின் இருபுறமும் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.