உசிலம்பட்டி,மார்ச்.
நாடு முழுவதும் உள்ள சீர்மரபினர், பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட 68 சமுதாய மக்களுக்கு டி.என்.டி. என்று ஒற்றைச் சான்று வழங்க வலியுறுத்தி உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பு மற்றும் சீர்மரபினர் சங்கத்தினர் இணைந்து கருப்புக் கொடி ஏந்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.