சிவகாசி,
சிவகாசி பள்ளபட்டி காமராஜர்புரம் காலனியில் வசித்து வந்தவர் மாரித்தாய் (வயது 80). இவர் தனது வீட்டில் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக விளக்கு தீ மாரித்தாயின் சேலையில் பரவி உடலின் பல பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உடல்கருகிய அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.