குண்டர் சட்டத்தில் 4 பேர் சிறையில் அடைப்பு
நெல்லை அருகே 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா-கொலை வழக்கு
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்ற சூசை (வயது 23).
இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. இதேபோல் ராம்நகரை சேர்ந்த உமையப்பன் மகன் மருதுபாண்டி (28) என்பவரும் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை அந்தோணி மகன் மரிய லாரன்ஸ் (48) மற்றும் பீட்டர் தெருவை சேர்ந்த சூசை பவுல் மகன் அன்டன் லியோ பிரகாஷ் என்ற பக்காஸ் (38) ஆகியோர் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்களது தொடர் நடவடிக்கையால் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்காக உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.