நெல்லையில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
நெல்லையில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லையில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
வாக்காளர் விழிப்புணர்வு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி வாகனத்தில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, நடமாடும் மாதிரி வாக்குச்சாவடியை தொடங்கி வைத்தார்.
செயல்விளக்க பயிற்சி
இந்த வாகனத்தில் வாக்குச்சாவடியில் இருப்பது போன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்க கூடிய விவிபேட் எந்திரம் ஆகியவை மாதிரியாக வைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து வாக்காளர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, பயிற்சி உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை மற்றும் பலர் உடன் இருந்தனர்.