ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் ஆய்வு

ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் செலவின பார்வையாளர் ஆய்வு

Update: 2021-03-13 17:27 GMT
ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் பிரசன்னா வி பட்டனஷெட்டி நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அனைத்து கிராமங்களிலும் கட்சியினரால் வரையப்பட்டுள்ள சின்னங்களின் செலவுகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும், அனைத்து சிலைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சி-விஜில் செல்போன் செயலியை பொது மக்களுக்கு தெரியும் விதத்தில் விளம்பரப்படுத்த வேண்டும், மேலும் ரிஷிவந்தியம் தொகுதியில் தேர்தல் தொடர்பாக 04151 239301 என்ற தொலைபேசி மூலம் வரும் அனைத்து புகார்களையும் தனி கவனம் செலுத்தி பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி துணை தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்கள் உதவி அலுவலர் ஆரோக்கியசாமி, சுதாகரன், அப்துல் கனி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர், உதவியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்