அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
மெஞ்ஞானபுரம் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாைகவிளையை சேர்ந்த வைகுண்ட ராஜா மகன் சுரேஷ் (வயது 27). பட்டதாரி வாலிபரான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த சுரேஷ் தனக்கு திருமணம் ஆகாத ஏக்கத்திலும், அரசு வேலை கிடைக்காத விரக்தியிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுரேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு உடன்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.