சாத்தான்குளம் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்

சாத்தான்குளம் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2021-03-13 16:52 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சாத்தான்குளம் தாசில்தாருமான செல்வகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்தாய் முன்னிலை வகித்தார். வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பது குறித்து மாணவிகளிடம் கலந்துரையாடல் நடந்தது. 

மேலும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. தேர்தல் குறித்த பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேர்தல் துணை தாசில்தார் கோபால், பேராசிரியை தர்ம சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்