லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2021-03-13 16:51 GMT
அரசூர், 
விழுப்புரம் மாவட்டம்  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் குமரன் மகன் தமிழ்செல்வன் (வயது 26). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

நேற்று மாலை திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கிய தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்