சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்தால் கடும் நடவடிக்கை
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
கீழக்கரை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கீழக்கரையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளை சேர்நத அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், சுவர் விளம்பரங்கள் செய்வது பற்றிய விதி முறைகளையும் எடுத்துக்கூறினார். மேலும் தேர்தலில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க உதவியாக அனைத்து கட்சி நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் கூறினார்.