பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் புதுப்பிக்கப்படுமா?

கூடலூரில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் புதுப்பிக்கப்படுமா?

Update: 2021-03-13 16:07 GMT
கூடலூர்:

கூடலூர் அரசு விதைப்பண்ணை சாலையில் பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை முன்பு கூடலூரை ஆட்சி செய்த பூஞ்சையாத்து ராஜா என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது.

 ஆரம்பகாலங்களில் இங்கு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நாளடைவில் யாரும் கண்டுகொள்ளாததால் கோவில் பழுது அடைந்து உள்ளது. கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகள் சேதம் அடைந்து மேற்கூரைகளில் புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. 

எனவே பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பித்து பக்தர்கள் வழிபாடு செய்யும் விதமாக மாற்றி அமைக்க  வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்

மேலும் செய்திகள்