ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல்
போடியில் ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல்
போடி:
போடி சாலை காளியம்மன் கோவில் அருகில் போடி சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் லாரியில் வந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மென்காட்டுப்பொய்கை பகுதியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி பாபு என்பவரிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது.
ஆனால் இந்த பணத்துக்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
----