உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.51 ஆயிரம் பறிமுதல்

கோத்தகிரியில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.51 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-13 14:29 GMT
கோத்தகிரி,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை பறக்கும் படை அலுவலர் மனோகர் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கோவை மாவட்டம் பொம்மண்ணபாளையத்தை சேர்ந்த பாலுசாமி என்பவர் 51 ஆயிரம் ரூபாயை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்