கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ
திருச்செந்தூர் ஆஸ்பத்திரியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
திருச்செந்தூர்,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூர் பி.ஜி.மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அப்போது டாக்டர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி ஆகியோர் உடனிருந்தனர்.