பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.75 ஆயிரம் பறிமுதல்

Update: 2021-03-13 13:25 GMT
பல்லடம்
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சின்ன கரையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரி மோகனா  தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த, ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 75 ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் முசிக் (வயது 52) என்பது தெரியவந்தது இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பல்லடம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான தேவராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்