எருமப்பட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்
எருமப்பட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் சூர்யா (வயது 22), லாரி டிரைவர். இவர் போடிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்தவரும், ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவியை கடத்தி சென்று விட்டதாக அந்த மாணவியின் தந்தை எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.