புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத் துறை செயலாளர் அருண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,199 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 87 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 104 பேரும் என 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 670 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.