சங்ககிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலத்தில் இருந்து லாரி மூலம் சங்ககிரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
சங்ககிரி,
சங்ககிரி சட்டசபை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 389 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதலாக 78 எந்திரங்கள் என மொத்தம் 467 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலத்தில் இருந்து லாரி மூலம் சங்ககிரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சங்ககிரி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பன் தலைமையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.