ஆத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் சாவு
ஆத்தூர் அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 80). இவர் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அய்யம்பெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.