சிவன் அலங்காரத்தில் சித்தர்

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2021-03-12 21:09 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சித்தர் முத்துவடுகநாதருக்கு சிவன் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவிற்கு வந்த பக்தர்கள் சித்தரை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்