ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான்.

Update: 2021-03-12 20:59 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முகில் செல்வன் (வயது 9). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சிறுவனுக்கு அதிக தலைவலி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். 

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் காய்ச்சல் மீண்டும் அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி முகில் செல்வன் பரிதாபமாக உயிரிழந்தான். 

ஏற்கனவே சுரண்டை, ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார துறையினர் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஆலங்குளம் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்