வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஒட்டன்சத்திரம் :
ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வரை சென்றது.
இதில், ஒட்டன்சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின்போது வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டுப்போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.