தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-03-12 20:48 GMT
பாவூர்சத்திரம்:

தென்காசி- கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையும், விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது.

மாசி மாதத்திற்கான பூஜை நடைபெற்றது. இதையொட்டி  அதிகாலையில் முருக பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்