சடேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
சடேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா;
விருதுநகர்,
விருதுநகர் அருகே கன்னிசேரியில் உள்ள சடேஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாலயா பள்ளி மாணவிகள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர். மேலும் கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.