217 மதுபாட்டில்கள் பறிமுதல்

217 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-03-12 20:29 GMT
நெல்லை:

நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஷியாம் சுந்தர் தலைமையில் போலீசார் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

சங்கரன்கோவில் திருவேங்கடம் ரோடு பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்ய இருந்த 192 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தச்சநல்லூர், தாழையூத்து பகுதியில் பதுக்கி விற்பனை செய்த 25 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பணகுடி, காவல்கிணறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த 50 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்