தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
மதுரை
மதுரை அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையிலான போலீசார் வில்லாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சபரிநாதன் (வயது 21) என்பவரை பிடித்து விசாரித்தபோது கீரைத்துறை மற்றும் அவனியாபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.24 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.