மேலூர்
மேலூரில் சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை அருகே சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பழைய டயர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த மேலூர் தீயணைப்புத்துறையினர் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். கடையில் இருந்த ரூ.1 லட்சத்துக்கு மேல் மதிப்பிலான பழைய டயர்கள், இதர பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தீயில் முற்றிலும் எரிந்தன. மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.