வேனை கடத்தியவர் கைது

வேனை கடத்தியவர் கைது

Update: 2021-03-12 20:25 GMT
சோழவந்தான்
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் கிராமத்தில் மினிவேன் கடத்தப்பட்டு விட்டதாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மினி வேனில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி மூலம் கடத்தப்பட்ட மினி வேன் எங்கு உள்ளது? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சோழவந்தான் பகுதியில் மினிவேன் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அந்த வேனை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த வேனை ஓட்டி வந்த திண்டுக்கல் திருமலையை சேர்ந்த சூசையை கைது செய்தனர். கடத்தப்பட்ட வேனை சில மணி நேரத்தில் மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்