ராதாபுரம் அருகே 2 கோவில்களில் நகை-பணம் திருட்டு

ராதாபுரம் அருகே 2 கோவில்களில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-03-12 20:22 GMT
ராதாபுரம்:

ராதாபுரம் அருகே தெற்கு வேப்பிலாங்குளத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். 
அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் உண்டியல் பணம் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

மேலும் சமூகரெங்கபுரம் அருகே சிங்காரத்தோப்பு முத்தாரம்மன் கோவிலில் இருந்த பெட்டியையும் உடைத்து அதில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றனர்.

 இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்