நெல்லை போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தடுப்பூசி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Update: 2021-03-12 20:13 GMT
நெல்லை:

கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், 45 வயதை தாண்டிய நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்  மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி மையத்தில், டாக்டர்களிடம் தக்க மருத்துவ பரிசோதனை செய்தார். பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்