உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் அலெக்சாண்டர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 950 கொண்டு வந்தார். அந்த பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசனிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.