இளையான்குடியில் மானாமதுரை சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் முறை, 100 சதவீதம் வாக்களிப்பது போன்ற பிரசார குறும்படங்களை பொதுமக்கள் பார்க்கும் விதமாக தாசில்தார் ஆனந்த் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனம் இளையான்குடி தாலுகா அலுவலகம், இளையான்குடி கண்மாய் கரை, பஜார் பகுதிகள், பஸ் நிலையம், சாலையூர், புதூர், திருவள்ளூர்சங்கையா கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும். அங்கு பொதுமக்கள் திரளான இடத்தில் குறும்படங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.தொடக்க விழாவில் துணை தாசில்தார் முத்துவேல், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், திருவள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.