ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக இருந்தது. அது 6-ந் தேதி இது 4-ஆக உயர்ந்து, பின்னர் 10-ந் தேதி மீண்டும் 1-ஆக குறைந்தது. தொடர்ந்து 11-ந்தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்து, நேற்று 5-ஆக உயர்ந்துள்ளது.
அரக்கோணம் கிருஷ்ணா பேட்டையை சேர்ந்த 66 வயது ஆண், ஆற்காடு அடுத்த சாத்தூர் காந்தி நகரை சேர்ந்த 39 வயது ஆண், ராணிப்பேட்டை பெல் டவுன்ஷிப் மற்றும் வாலாஜா பஜார் தெருவை சேர்ந்த 2 வாலிபர்கள், வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் என 5 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.