திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல்

Update: 2021-03-12 19:23 GMT
திருவண்ணாமலை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் தாலுகா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த நக்கீரன் (வயது 46), செல்வம் (51) என 2 பேரும், ஆரணி சட்டமன்ற தொகுதியில் ஆரணி பையூரை சேர்ந்த சக்திவேல் என்பவரும், போளூர் சட்டமன்ற தொகுதியில் சேத்துப்பட்டு தாலுகா மேலத்தாங்கல் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (74) என 4 பேரும் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர். 
செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 

மேலும் செய்திகள்