குளித்தலையில் கோலம் வரைந்து விழிப்புணர்வு
குளித்தலையில் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
குளித்தலை
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வருவாய்த்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதன்மை வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக குளித்தலை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரைந்தனர். இதை குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் பார்வையிட்டார். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் குளித்தலை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், தனி வட்டாட்சியர் மகாமுனி, கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.