கரூர் நகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்
கரூர் நகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கரூர்
கொரோனா தொற்று
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கரூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் யோகானந்த் தலைமையில், அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கரூர் பஸ்நிலையம் அருகில் உள்ள மனோகரா கார்னர் பகுதியில் முககவசம் அணியாமல் அந்த வழியாக வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
அபராதம்
மேலும், இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களையும் நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கரூரில் லைட்ஹவுஸ் கார்னர், ஜவகர்பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.