தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி

தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2021-03-12 18:54 GMT
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். தேங்காய் விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் பறித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.139-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ134.50-க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்