சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சின்னசேலம்
சின்னசேலம் அருகே எலியத்தூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 60). தொழிலாளி. சம்பவத்தன்று வெளியே சென்ற ராமர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ராமரை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ராமர் பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு மீட்பு வீரர்கள் ராமரின் உடலை மீட்டு சின்னசேலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் விவசாய நிலத்தில் குளிக்க சென்ற போது ராமர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.