திருக்கோவிலூர் அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதல் பிளஸ்2 மாணவர் பலி
திருக்கோவிலூர் அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதல் பிளஸ்2 மாணவர் பலி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வடியாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் பிரகாஷ்(வயது 17). பிளஸ்-2 மாணவரான இவர் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ்(16) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெடுமுடையான் கிராமத்தில் இருந்து கோலப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ஏழுமலை மகன் பிரகாஷ் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.