திண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்

திண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்

Update: 2021-03-12 16:57 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் ரோசனை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ் (வயது 30). இவரை ஒரு வழக்கில் ரோசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு  மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது தினேஷ் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை ரோசனை இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரோசனை பகுதியில் உள்ள ஏரியில் சுற்றித்திரிந்த தினேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்