திருப்பூரில் வாகன சோதனையில் என்ஜினீயரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் திருப்பூரில் வாகன சோதனையில்

என்ஜினீயரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்

Update: 2021-03-12 16:21 GMT
திருப்பூர்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரியான கீதா தலைமையில் நேற்று இரவு பூண்டி ரிங் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இதில் கோவையை சேர்ந்த என்ஜினீயர் ரமேஷ்குமாரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதன் முன்னிலையில் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்