சாத்தான்குளம் வட்டாரத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடூப்பூசி
சாத்தான்குளம் வட்டாரத்திலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டாரத்திலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது. தற்போது கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போடப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சாத்தான்குளம் வடடார கல்வி அலுவலர் யசோதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
இதில் தூத்துக்குடி தொற்றா நோய் மருத்துவ அலுவலர் மெர்வினோ, தொழில் நுட்ப உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். இதில் வட்டார கல்வி அலுவலர் யசோதா மற்றும் 15 ஆசிரியர்களும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர்.
நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் சுவிட்லின் தலைமையில் பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் நன்றி கூறினார்.
களப்பணியாளர்களுக்கு...
மேலும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது நோய் தாக்கம் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பலர் தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா உள்ளிட்ட களபணியாளர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள் 39 பேர்கள் தடுப்பு ஊசி கொண்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன் களப்பணியாளர்கள் மற்றும் அரசு தெரிவித்துள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.