வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா, ஒரேநாளில் 30 பேருக்கு பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் ஒரேநாளில் 30 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-03-12 12:42 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 10 பேருக்கு இருந்தது. தினமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. 

அதன்படி நேற்று வெளியான முடிவு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரேநாளில் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. வடமாநிலங்களில் 2-வது அலை ஏற்படுவதால் அங்கு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2-வது அலையை தடுக்க தமிழகத்திலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்