சென்னை மாநகராட்சியில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் ரூ.3½ கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சியில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் ரூ.3½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-12 12:16 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் மொத்தம் ரூ.3 கோடியே 66 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்